- Ads -
Home சற்றுமுன் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் திமுக.,! போட்டுத் தாக்கும் இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #ZeroMpDmk

ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் திமுக.,! போட்டுத் தாக்கும் இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் #ZeroMpDmk

மு.க.ஸ்டாலினுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. தந்தை செய்த தவறுகளுக்கெல்லாம் தனயன் இப்போது பல முனைத் தாக்குதல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

சினிமா, ஊடகம், ஊடகக் காரர்களின் பலத்தை வைத்து தமிழகத்தின் மூளையை பேதலிக்க வைத்து ஆட்சியைப் பிடித்த திமுக., இப்போது சமூக ஊடகத் தாக்குதலை பலமாக எதிர்கொண்டு வருகிறது.

வெட்டித் தனமாய் வீட்டில் இருந்த இளைய சமுதாயத்தை, 200 ரூபாய்க்கு போஸ்ட் போட வைத்த அரும் பெரும் சாதனையைச் செய்து பலருக்கு வேலை வாய்ப்பளித்த திமுக., இப்போது தானியங்கி இளைஞர்கள் குழுவால் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. கோபேக் மோடி, கோபேக் அமித்ஷா என்று போட்ட டிவிட்டர் ட்ரெண்டுக்கு இப்போது பழி தீர்க்கும் விதமாய் வெச்சி செய்து வருகிறார்கள் இணைய வாசிகள்!

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார், அவர் எப்படி நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பார் என்ற கேள்வியை இப்போது இணையதளவாசிகள் கேட்டு வருகிறார்கள். டிவிட்டர் ட்ரெண்டாக இதையே இன்று ஆக்கவும் செய்திருக்கிறார்கள்.

ALSO READ:  IPL 2025: வெற்றிகரமான தொடக்கத்துடன் பெங்களூர் அணி!

பழைய நினைப்புல பேராண்டி திமுக.,வுக்கு ஏதோ உறுப்பினர்கள் நாடாளுமன்ற மக்களவையில் இருப்பது போல் பேசியிருக்கிறாரே ஸ்டாலின் என்று ஆச்சரியத்தில் வாய்பிளக்காதவர்கள் இல்லை! ஒருவேளை தார்மீக ரீதியாக என்றால், திமுக., வெளியில் இருந்து தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்குமோ என்னவோ? அப்படி என்றால், நாமும் எதிர்ப்பு அளிப்போமே என்று பலரும் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிலளித்து வருகிறார்கள். 

காரணம், திமுக.,வுக்கு நாடாளுமன்ற மக்களவையில் ஒரு எம்.பி.,கூட கிடையாது! இதை அதிமுக., நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயனின் டிவிட்டர் பதிவு கொஞ்சம் வித்தியாசமாக வெளிப்படுத்தி யிருக்கிறது..

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும். – ஸ்டாலின்.
திமுகவிற்கு மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லை. அப்படி இருக்க எந்த அடிப்படையில் ஆதரவு? தார்மீக ஆதரவை எல்லாம் வாக்கெடுப்பின் போது கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

 

எப்படியோ… இரு தினங்களுக்கு முன் @GoBackStalin ஹிட் அடித்தது. இன்று தேசிய அளவில் டிவிட்டர் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது #ZeroMpDmk

ALSO READ:  பொன்முடியின் ஆபாச பேச்சு; அமைச்சராக தொடர சரி; கட்சியில் தொடர தவறாம்!

நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி.,கூட இல்லாத திமுக., பாஜக.,வுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவா? 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version