டென்னிஸ் நட்சத்திரம் கரோலினா பிளிஸ்கோவா (Karolina Pliskova) தனது காதலர் மைக்கேல் ஹர்ட்லிக்காவை திருமணம் செய்து கொண்டதாக நேற்று அறிவித்துள்ளார்.
டிவி தொகுப்பாளரான மைக்கேல் பிளிஸ்கோவாவின் மேனேஜராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் விம்பிள்டன் தொடர் முடிந்ததும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், பிளிஸ்கோவா நேற்று திருமண புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இரட்டை சகோதரியான கிறிஸ்டினா பிளிஸ்கோவா, மைக்கேலின் மகள் உட்பட நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.