மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. லண்டன், லீ வாலி ஹாக்கி மற்றும் டென்னிஸ் மையத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில், மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இன்று சந்திக்கிறது. இப்போட்டி மாலை 6.30க்கு தொடங்குகிறது. ஜெர்மனி – தென் ஆப்ரிக்கா மோதும் தொடக்க லீக் ஆட்டம் மாலை 4.30க்கு தொடங்கும். இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் ஜூலை 26ம் தேதி அயர்லாந்து அணியையும், 3வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஜூலை 29ம் தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாடி கால் இறுதிக்கு முன்னேற வேண்டும்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari