October 24, 2021, 1:23 am
More

    ARTICLE - SECTIONS

    இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா?

    10 July23 Indian test team - 1இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தாலும், ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இந்தியா இழக்காது என தெரியவந்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கவுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்தியா 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 97 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

    இந்தத் தொடரில் 5-0 என இங்கிலாந்து வென்றாலும், இந்தியாவின் புள்ளி 112ஆகக் குறையும். அதனால், தொடர்ந்து முதலிடத்திலேயே இந்தியா இருக்கும்.

    தற்போது 112 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது தென்னாப்பிரிக்கா. இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது.

    தற்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் அல்லது டிரா செய்தாலும், அந்த அணி 110 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,138FansLike
    368FollowersFollow
    39FollowersFollow
    74FollowersFollow
    1,585FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-