அமெரிக்காவில் நடைபெற உள்ள ’Mae Young Classic’ எனும் தொழில்முறை மல்யுத்த போட்டியான WWE-வில், இந்திய வீராங்கனை கவிதா தேவி பங்கேற்க உள்ளார்.
உலகின் மிகவும் புகழ்பெற்ற WWE மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான பிரிவில் விளையாட, இந்தியாவின் முதல் பெண் வீராங்கனையான கவிதா தேவி சில ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்தார்.
அவரது திறமையை அறிந்த WWE, தனது நிகழ்ச்சிகளில் வாய்ப்பு அளித்து வருகிறது. இதனால் அவர் சில போட்டிகளில் விளையாடினார்.
இந்நிலையில், அமெரிக்காவில் ’Mae Young Classic’ எனும் பெண்களுக்கான தொழில்முறை Wrestling தொடர் நடைபெற உள்ளது. பிரபல WWE வீராங்கனையான Braun Strowman, இந்தியாவில் தற்போது விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர், WWE-வில் ‘Monster’ என்று அழைக்கப்படுகிறார்.
Braun Strowman கூறுகையில், ‘அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் 8,9ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ’Mae Young Classic’ தொடரில் கவிதா தேவி பங்குபெறுவார், இதன் மூலம் இந்நிகழ்ச்சி அதிகளவில் பார்வையாளர்களை கொண்டு வரும்’ என தெரிவித்துள்ளார்.