லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுங்கக்கட்டண சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தியா முழுவதும் சரக்குந்து உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் 4-வது நாளாக இன்றும் நீடிப்பதால், மக்கள் அவதிகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர்” என்றும், இந்த் போராட்டத்தால் நாடு முழுவதுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.