
சொத்து வரி உயர்வைக் கண்டித்து வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக இன்று வெளியிட்ட அறிக்கையில், “மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரியை திடீரென உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது என்றும், எனவே கடுமையான இந்த சொத்து வரி உயர்வைக் கண்டித்து அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன்பு வரும் 27-ம் தேதி காலை 10 மணியளவில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.