இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாடு முழுவதும் கடந்த 4 தினங்களாக நடைபெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 7000 கோடி ரூபாய்க்கு சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. இதன் விளைவாக கட்டுமானப் பொருட்கள், காய்கறிகள், கனிகள், தேங்காய், உணவுப் பொருட்கள், பூ உள்ளிட்ட அனைத்தும் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இனியும் காலம் கடத்தாது, உடனடியாக லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன் வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.