கிருஷ்ணகிரியில் இன்று முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா, வெளியிட்ட செய்தியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், அவரை சார்ந்தோர் மற்றும் தற்போது பணிபுரியும் படைவீரர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம், இன்று காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை விண்ணப்பமாக சமர்ப்பித்து பயனடையலாம். விண்ணப்பங்களை இரட்டைப் பிரதிகளில் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும். கூட்டம் நடைபெறும் நாளில் காலை 9 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும்.