போராளி என்ற வார்த்தை கருணாநிதியையே சாரும் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இரவில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதில் இருந்து இந்த நாள்வரை போராளி என்ற வார்த்தையை கருணாநிதி சொல்கிறார் என குறிப்பிட்டுள்ளார். ஒருபோதும் நம்பிக்கையை இழக்காமல் வாழ்ந்து வரும் அவர் உத்வேகமான மனிதர் என்று பதிவிட்டுள்ள விஷால், வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் வித்தியாசமான கோணத்தில் எனக்கு வழங்கிய தலைவரே, நான் உங்களுக்கு தலைவணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.