11/07/2020 7:33 AM
29 C
Chennai

திருநங்கைகளை அதிகாரபூர்வ செயல்களுக்கும் டிரான்ஸ்ஜென்டர் வார்த்தை பயன்படுத்தப்படும்: மேனகா காந்தி

சற்றுமுன்...

ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது!: ஆர்.பி.உதயகுமார்!

அத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்!

அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்

100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி!

இந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி!

இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்!

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதில் மொத்தம் 200 நபர்களுக்கு மேல் (Swap Test) எடுக்கப்பட்டது.

08 July31 Menha Gandhi திருநங்கைகளை அதிகாரபூர்வ செயல்களுக்கும் டிரான்ஸ்ஜென்டர் வார்த்தை பயன்படுத்தப்படும்:  மேனகா காந்திபாடப் புத்தகங்களில் மனிதக் கடத்தல் தடுப்பு குறித்த தகவல்களைச் சேர்ப்பதுகுறித்து கடந்த வியாழக்கிழமை மக்களவையில் பேசினார், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி. அப்போது, திருநங்கைகளை `மற்றவர்கள்’ என்ற வார்த்தையைக் கூறி அவர் அழைத்தார். இதற்கு மற்ற எம்.பி-க்கள் மேஜையைத் தட்டி சிரித்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்து திருநங்கைகள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணி அமைப்பின் உறுப்பினரும், திருநங்கையுமான மீரா சங்கமித்ரா உள்ளிட்ட திருநங்கைகள் இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன், மத்திய அமைச்சர் மேனகா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினர்.

விவகாரம் பூதாகரமானதை அடுத்து, நேற்று மக்களவையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மன்னிப்பு கோரினார். மேலும், ‘திருநங்கைகளை ஏளனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் `மற்றவர்கள்’ வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு உண்டான அதிகாரபூர்வ பெயர் தெரியாததால்தான் அவ்வாறு கூறினேன். இனி அனைத்து அதிகாரபூர்வ செயல்களுக்கும் டிரான்ஸ்ஜென்டர் வார்த்தை பயன்படுத்தப்படும்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad திருநங்கைகளை அதிகாரபூர்வ செயல்களுக்கும் டிரான்ஸ்ஜென்டர் வார்த்தை பயன்படுத்தப்படும்:  மேனகா காந்தி

பின் தொடர்க

17,863FansLike
78FollowersFollow
70FollowersFollow
903FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை