கோவையில் உலக அமைதிக்காகவும், தொழில் வளர்ச்சி அடையவும், மழை பெய்து நீர் நிலைகள் நிறையவும் ஜெகநாத் டெக்ஸ்டைல்ஸ் சார்பாக மகா ருத்ர யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் பொது மக்களே சிவபெருமானுக்கு அபிசேகம் செய்யும் வகையில் அமைந்திருந்தனர். சிவபெருமானுக்கு கரும்புச்சாறு , கரும்புச்சர்க்கரை, வில்வம், தாமரை இலைகளை கொண்டு அபிசேகம் செய்தனர். மகா ருத்ர அபிசேகத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் ருத் ராட்சை மாலை வழங்கப்பட்டது. வட இந்தியாவில் மிகபிரபலமாக செய்யப்படும் இந்த யாகம் 12 ஆம் வருடமாக கோவையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. யாகத்தின் இறுதியாக 1008 லிட்டர் பால் அபிசேகம் செய்யப்பட இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari