இன்றிலிருந்து மழை தீவிரமாக பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை என மொத்தமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.