பாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி

அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில், பாலைவனப் பகுதியில் இருக்கும் ஒரு தனி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 11 சிறுவர்களும் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்த பயிற்றுவிக்கப்பட்டதாக, அவர்களை அடைத்து வைத்ததற்காக கைது செய்யப்பட்ட இரு நபர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

அந்த சிறுவர்கள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் மெலிந்த நிலையில் இருந்தனர்.

அந்த சிறுவர்கள் தாய்கள் என்று கருதப்படும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.