அமேசானுக்கு போட்டியாக பிளிப்கார்ட் சுதந்திர தின சிறப்பு விற்பனை அறிவிப்பு

அமேசான் நிறுவனம் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது, அதற்கு போட்டியாக தற்சமயம் பிளிப்கார்ட் நிறுவனம் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சிறப்பு தள்ளுபடியின் போது தேர்வு செய்யப்பட்ட வங்க கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கினால் உடனடி தள்ளுபடியாக 10சதவிதம் குறைக்கப்படும் என பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் வழங்கும் இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு நிறுவனங்களின் குளிர்சாதன பெட்டிகள்இ சலவை இயந்திரங்கள் மற்றும் டிவி மாடல்கள் போன்றவற்றிக்கு 70 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங், சியோமி, ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் சாதனங்களுக்கு அதிக விலைகுறைப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன், லேப்டாப், கேமரா, போன்ற சாதனங்களுக்கு இந்த பிளிப்கார்ட் விற்பனையில் 80சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆப்பிள், டெல் மற்றும் கூகுள் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு குறிப்பிட்ட விலைகுறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் இந்த பிளிப்கார்ட் பிளஸ் இணையதளத்தை பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த பிளிப்கார்ட் பிளஸ் இணையதளம்.

இந்த பிளிப்கார்ட் பிளஸ் பொறுத்தவரை இலவச விரைவு டெலிவரி,புதிய பொருட்களுக்கான சலுகைகள் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அனைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் பொதுவாக அமேசான் பிரைம், இப்போது வரும் பிளிப்கார்ட் பிளஸ் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு தகுந்தபடி அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் மாதஃவருட சந்தா திட்டத்தை செலுத்தி இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பிளிப்கார்ட் பிளஸ் திட்டத்தில் இணைவதற்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.