கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் இன்று தண்ணீர் திறப்பு

கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் 5 மதகுகள் வழியாக நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. கனமழையால் இடுக்கி அணை வேகமாக நிரம்பி வருகதால் இன்று ஒரு மதகின் வழியாக நீர் திறப்பட்டது.

கனமழையால் இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம், உடும்பன்சோலை, பீருமேடு தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.