கேரளாவில் ரிசார்ட்டில் 20 வெளிநாட்டவர் உட்பட 69 பேர் வெளியேற முடியாமல் தவிப்பு

கேரளாவில் தென்மேற்குபருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இரு மாதங்களாக கனமழை பெய்து வருவதால், நீர்நிலைகள் நிரம்பி விட்டன. மழை தொடர்பான சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவின்படி அணைக்கு வினாடிக்கு 521 கன அடி தண்ணீர்வந்து கொண்டுள்ளது. மேலும் 2 மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு பின், அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில், இடுக்கி மாவட்டம், மூணாறில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்கு செல்லும் வழியில், நிலச்சரிவு ஏற்பட்டது. சாலை துண்டிக்கப்பட்டதால், ரிசார்ட்டில் தங்கியுள்ள 20 வெளிநாட்டவர் உட்பட 69 பேர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.