ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா தீவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா கார்த்திக், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர், மகளிர் பிரிவில் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இதேபோன்று, ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் பிரிவில் சவுரவ் கோஷலும் வெண்கலப் பதக்கம் சென்றார். இவர்கள் மூன்று பேருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, மூன்று பேருக்கு தனித்தனியாக அவர் எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், மேலும் பல பதக்கங்களை வென்று நாட்டுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.