முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சிபுரத்துக்கு வருகை தரவுள்ளார்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்துக்கு அவர் வருகிறார். அப்போது, பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் வகுப்பறைகள், கருத்தரங்குகள், ஆய்வகங்கள் அடங்கிய 4 அடுக்குமாடிக் கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 60 அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆதிசங்கரர் சிலையை வணங்குவார். மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு, சங்கர மடத்துக்கு சென்று பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெறவுள்ளார்.