தென்காசி: தென்காசியை அடுத்த சுரண்டை அருகே பங்களாசுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், தனியார் பஸ்ஸில் படிக்கட்டில் மட்டுமல்லாமல், பின்புற ஏணியிலும் ஏறித் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ பதிவு ஒன்று வைரலானது. இது குறித்த செய்தியும் செய்தித் தளங்களிலும், செய்தி தொலைக்காட்சியிலும் வெளியானது.
இந்த நிலையில் உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள், சம்பந்தப் பட்ட தனியார் பஸ் உரிமையாளரிடம் எச்சரிக்கை செய்தனர். இதை அடுத்து, அந்த பேருந்தின் ஏணி கழற்றி வீசப்பட்டது. இனி மாணவர்கள் இது போல் ஏணியில் தொங்கிக் கொண்டு வர இயலாது.