தென்காசி: அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு அடுத்த ஆண்டு முதல் விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் பாவூர்சத்திரத்தில் உள்ள ஔவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீட் மற்றும் ஜே இ இ பயிற்சி மையத்தைத் தொடங்கி வைத்து பேசினார் அமைச்சர் செங்கோட்டையன். அப்போது அவர், அடுத்த ஆண்டு 12ஆம் வகுப்பில் திறன் மேம்பாடு பற்றிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும்; 12ஆம் வகுப்புப் படிக்கும் 25 ஆயிரம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பட்டயக் கணக்கர் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.
இந்த விழாவில் 135 பயனாளிகளுக்கு தொண்ணூறு லட்ச ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப் பட்டன.