தமிழ் மிக அழகான மொழி… வெளிநாட்டு மாணவர்களின் தமிழ்ப் பேச்சில் கிறங்கிய ஜனாதிபதி!

பின்னர் தமிழ் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்துப் பேசியவற்றை பெருமிதத்துடன் கேட்டார். தமிழ் மொழியுடன் சம்ஸ்கிருதமும் படித்தேன் என்று அங்குள்ள ஆராய்ச்சி மாணவர்கள் பேசியதைக் கேட்டு

பராகுவேயில் உள்ள சார்ல்ஸ் பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார் பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். .

அதன் பின்னர், இந்திய மொழிகள் படிப்பகத் துறையில் உள்ளவர்களுடன் உரையாடினார். பின்னர் தமிழ் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்துப் பேசியவற்றை பெருமிதத்துடன் கேட்டார். தமிழ் மொழியுடன் சம்ஸ்கிருதமும் படித்தேன் என்று அங்குள்ள ஆராய்ச்சி மாணவர்கள் பேசியதைக் கேட்டு பெருமிதத்துடன் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார் ராம்நாத் கோவிந்த்.

 

தமிழ் ஒரு மிக அழகான மொழி என்று சார்ல்ஸ் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயின்ற மாணவி சிமோனா சிலோவா பேசியதைக் கேட்டு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் ராம் நாத் கோவிந்த். .

தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் அவர்கள் பேசியதைக் கேட்டு பூரிப்படைந்ததாகக் குறிப்பிட்டுள்ள ராம் நாத் கோவிந்த், தனது டிவிட்டர் பதிவுகளில் வரிசையாகக் குறிப்பிட்டவை….