செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கும் நிலையில், சதுர்த்தி விழாவுக்கான விநாயகர் சிலைகள் செங்கோட்டை, காலாங்கரை பகுதியில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.
விநாயகர் சிலைகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. இந்த வருட விநாயகர் சதுர்த்திக்காக, விதவிதமான கான்ஸப்ட்களில் விநாயகர் சிலைகள் செய்யப் பட்டு, காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.
சிவலிங்கத்தைத் தோளில் சுமந்து செல்லும் விநாயகர், ஹனுமன், சிம்மம் உள்ளிட்ட பஞ்ச முக விநாயகர், அனுமன் சுமந்திருக்கும் விநாயகர், அனுமனுடன் விளையாடும் விநாயகர், கிருஷ்ணனுடன் அமர்ந்த நிலையில், சிவன் பார்வதி உடன் மடியில் அமர்ந்த பெரிய விநாயகர், குதிரை மீது ஏறிய விநாயகர் என விதவிதமான விநாயகர் உருவங்கள் இந்த முறை விநாயகர் சதுர்த்திக்கு காட்சிக்கு உள்ளன.
இந்த விநாயகர் சிலைகளை ஏற்கெனவே ஆர்டர் செய்து பல ஊர்களுக்கும் அனுப்பும் பணியில் இங்குள்ளவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து ஆர்டர்கள் அதிகம் வந்துள்ளதாக இங்குள்ளோர் தெரிவிக்கின்றனர்.