ஷீனா போரா வழக்க்கில் பீட்டர் முகர்ஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது சிபிஐ

 

மும்பையைச் சேர்ந்த இளம்பெண்  ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாயார் இந்திராணியின் மூன்றாவது கணவரான பீட்டர் முகர்ஜியை கைது செய்த சிபிஐ இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளது.

இளம்பெண் ஷீனா போரா (இந்திராணி முகர்ஜிக்கும், அவரது முதல் கணவருக்கும் பிறந்தவர் ஷீனா போரா).கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோரை மும்பை காவல் துறையினர்

 கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐக்கு கடந்த செப்டம்பர் மாதம் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிபிஐ கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஷீனா போராவின் மூன்றாவது கணவரும் தனியார் தொலைக்காட்சி நிறுவன முன்னாள் உயரதிகாரியுமான (தற்போதைய கணவர்), பீட்டர் முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

குற்றவாளிகளை பாதுகாக்க முயன்றக் குற்றத்துக்காக பீட்டர் முகர்ஜியை சிபிஐ போலீஸார் வியாழக்கிழமை திடீரென கைது செய்தனர். சிபிஐயின் இந்த நடவடிக்கை, இந்த வழக்கில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் து சிபிஐ உயரதிகாரி ஒருவர் செய்தியாளரிடம் கூறியதாவது : –

இந்திராணி, சஞ்சீவ் கன்னா, ஷியாம் ராய் ஆகியோரிடம் தனித்தனியே நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலையில் பீட்டர் முகர்ஜிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே அவரைக் கைது செய்ய சிபிஐ முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் பீட்டர் முகர்ஜியை கைது செய்தனர். அவர் மும்பை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்படுவார் என அந்த அதிகாரி கூறினார்.

முன்னதாக, இந்திராணி முகர்ஜி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் மீது 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை தாக்கல் செய்தனர். அதில், அவர்கள் மூவரும் குற்றவாளிகள் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது என அந்த அதிகாரி கூறினார்.