‘‘மூடு டாஸ்மாக்கை மூடு’’ பாடலை தொடர்ந்து ‘‘ஊரெங்கும் மழை வெள்ளம் தத்தளிக்குது தமிழகம்’’ எனும் பாடகர் கோவன் பாட்டு காணொளி வெளியீடு!

 

மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சமூக பிரச்சினைகளை வலியுறுத்தி வீதி நாடகங்களையும் இவர்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்த அமைப்பினர், ‘‘மூடு டாஸ்மாக்கை மூடு’’ என்ற தலைப்பில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக பாடல் ஒன்றை எழுதி அதனை ஆடியோ மற்றும் காணொளியாக தயாரித்து வெளியிட்டு இந்தனர். சுமார் 6 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் டாஸ்மாக் மதுவுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. ‘‘ஊருக்கு ஊரு சாராயம்… தள்ளாடுது தமிழகம்’’ என்று தொடங்கும் இந்த பாடலை மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலை குழு பொறுப்பாளரும், பாடகருமான கோவன் (51) என்பவர் பாடியுள்ளார்.

இந்த பாடல் காணொளி  வாட்ஸ் ஆப், யூ.டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் மிக வேகமாக வைரலாக பரவி வந்தது .

இதை தொடர்ந்து தமிழக அரசு  பாடகர் கோவன் மீது தேசதுரோக வழக்கு  உள்ளிட்ட பல்வேறு  சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள பாடகர் கோவன்‘‘ஊரெங்கும் மழை வெள்ளம் தத்தளிக்குது தமிழகம்’’ எனும் பாட்டைபாடி காணொளியாக  வெளியிட்டு உள்ளார்.

பாடகர் கோவன் பாடிய  பாட்டு மற்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறிய பேட்டியுடன் கூடிய   காணொளி தற்போது வாட்ஸ் ஆப்பில் மிக வேகமாக வைரலாக பரவிவருகிறது.

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் காணொளி  இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

காணொளி வாட்ஸ்ஆப்பில் வைரலாக     

 தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .