ஜெயலலிதா பேச்சை மிமிக்ரி செய்து  காணொளியாக வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவவிட்ட வாலிபர்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசுவது போல் ஒருவர் பேசி அதை காணொளியாக  பதிவிட்டு  வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் பெரும்பாலானோர்  அவர்களது  திறமையை  வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்துபல பதிவுகளை  பதிவிடுகின்றனர்.

ஒரு சிலர் அவர்களின்  பதிவுகளில்  முக்கியமாக அரசியல் கட்சி தலைவர்களை பலவிதமாக சித்தரித்து  நக்கல், நையாண்டி செய்து  எதைக் கண்டும் அஞ்சாமல் மிகத் துணிவுடன்  சமூக ஊடகங்களில்  பதிவிடுவது  தற்போது அதிகமாகியுள்ளது. 

 அவ்வாறு   பதிவிடப்படும் பதிவுகளில் சிக்காத அரசியல்வாதிகளே இல்லை என்கிற  நிலைமைதான் தற்போது நிலவுகிறது.

மேலும் ஊடகத் துறையில்  பணியாற்றும் செய்தியாளர்களை அரசியல்வாதிகள் கண்டால் அவர்களிடம் சிக்கி ஏதாவது அவர்களுக்கு எதிரான செய்திகள் ஊடகங்களில் வந்து  விடக் கூடாது என  பயந்து ஓடும் நிலைமையே  கடந்த காலங்களில் இருந்தது. ஆனால் தற்போது சமூக ஊடகங்களில்  செய்திகள் பதிவிடுபவர்களை கண்டு பயந்து செய்வது அறியாமல் முழித்து கொண்டுள்ளனர்.  

அரசியல்வாதிகளுக்கு எதிரான செய்திகளை செய்தியாளர்கள் உருவாக்கி அவர்கள் பணியாற்றும் ஊடகதில்  வெளியிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு அன்பளிப்பு கொடுத்தும் சரிக்கட்டி வந்தனர்.

ஊடக நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர் ஒரு சிலரைத் தவிர  அன்பளிப்புமீது மோகம் கொள்(ல்)லாமல்  நேர்மையாக பணியாற்றுபவர்கள் தற்போதும் உள்ளனர்.

நடுநிலைமையாக  எவருக்கும் ஆதரவு அளிக்காமல் எதைக் கண்டும் அஞ்சாமல் மிக துணிவுடன்  செய்தியாளர்கள் உருவாக்கி  செய்திகளை அவர்கள் பணியாற்றும் ஊடகத்தில்  வெளியிட்டும்  வருகின்றனர்.

ஊடகத் துறையில் நேர்மையாக பணியாற்றுபவர்கள்  தவறு செய்பவர்களுக்கு எதிரான  செய்திகளை உருவாக்கி  அனுப்பினாலும்  பல  ஊடக நிறுவனத்தினர் அந்த செய்தியை பயன்படுத்தி  பணத்தின் மோகத்தில் மிரட்டல் விடுத்து பல வழிகளில் லஞ்சப் பணத்தை சம்பாதித்து  செய்திகளை  அவர்களது ஊடகங்களில் வெளியிடாமலும்  உள்ளனர். பல ஊடக நிறுவனங்கள்  அரசியல்  கட்சியினரிடம்  உள்ளதால்  செய்தி வெளியீட்டிலும் பலர் அரசியல் நடத்துகின்றனர். இது நிதர்சனமான உண்மை.  இதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசுவது போல் ஒருவர் பேசி அதை காணொளியாக  பதிவிட்டு  வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளார்.

வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.