இந்த ஆண்டின் சிறந்த மனிதராக மோடி அறிவிக்கப்படுவாரா ?

 

இந்தாண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்ய அமெரிக்காவின் பிரபல, ‘டைம்’ பத்திரிகை, வாசகர்களுக்கான போட்டியை நடத்துகிறது.

அந்த போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, இந்தியாவைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, உள்ளிட 58 பேர் இடம் பெற்றுள்ளனர்.

வாசகர்களின் அதிகப்படியான வாக்குகளை பெறுபவர், இந்தாண்டின் சிறந்த மனிதராக அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார்.

இதுவரை, மோடி, சுந்தர் பிச்சை, ரஷ்ய அதிபர் புடினுக்கு ஆதரவாக, தலா, 1.3 சதவீத வாசகர்கள் வாக்கு அளித்துள்ளனர். 0.2 சதவீதம் பேர் முகேஷ் அம்பானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நவீனமயமாக்கவும், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும், மோடி சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார்,

மேலும் மோடி பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார் என டைம் பத்திரிகை கூறியுள்ளது :-

தொலைத்தொடர்பு துறைமுதல், எண்ணெய் சுத்திகரிப்பு வரை அனைத்து துறைகளிலும் கால் பதித்து, இந்தியாவின் முதல் நிலை பணக்காரராக, முகேஷ் அம்பானி திகழ்கிறார்,

11 ஆண்டுகள் ‘கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி, அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான, லாரி பேஜ்ஜின் வலது கரமாக, சுந்தர் பிச்சை உயர்ந்துள்ளார் என்றும் டைம் பாராட்டியுள்ளது.

கடந்த ஆண்டும் டைம் பத்திரிகையின், சிறந்த மனிதருக்கான போட்டியில் இடம் மோடி பெற்றிருந்தார்;

50 லட்சம் வாசகர்களில், எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர், மோடிக்கு வாக்குஅளித்து இருந்தனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டே, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோர் இந்தாண்டு போட்டியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.