செங்கோட்டை கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது: எஸ்பி., அருண் சக்திகுமார்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் பேட்டி...

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் பேட்டி…

நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதிகளுக்கு வரும் 22ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் விநாயகர் சிலை அழைப்பின் போது ஏற்பட்ட கலவரத்தில் கல்வீச்சு தடியடி நடைபெற்றது. இதை அடுத்து சம்பவத்தில் ஈடுபட்டிருந்த 15க்கும் மேற்பட்டோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கூடிய ஒரு தரப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால் மட்டுமே கலந்து செல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவ்விடத்துக்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் கூட்டத்தினரிடம் சமாதான பேச்சில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது…

செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதிகளில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இன்று தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் வெளியூர் நபர்கள் யாரேனும் கலவரத்தில் ஊருக்குள் வந்து உள்ளனரா என்பது குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறோம்…. என்று தெரிவித்தார்.