மாநில ஆளுநர் மீது இந்திய தேசிய கீதம் அவமதிப்பு புகார்

 
ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் மீது இந்திய தேசிய கீதத்தை அவமதித்தாக புகார் கூறப்பட்டுள்ளது.
 
ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கல்யாண் சிங், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜூலையில் பங்கேற்று பேசினார். அப்போது,
 
ஜனகன மன என துவங்கும், நம் தேசிய கீதத்தில் உள்ள, ‘அதிநாயக’ என்ற சொல் சரியானதாக படவில்லை.
 
நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் இயற்றப்பட்டதால், இந்த வார்த்தை, ஆங்கிலேயர்களின் தலைமையை புகழ்வது போல உள்ளது.எனவே, இந்த, ‘அதிநாயக’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும். அதற்கு பதிலாக, ‘மங்கள்’ என்ற வார்த்தையை, பயன்படுத்த வேண்டும் என்றார். ஆளுநர் கல்யாண் சிங்கின் இந்த பேச்சுக்கு, அப்போதே, கடும் விமர்சனம் எழுந்தது.
 
இதுகுறித்து, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை, மேற்கு வங்கத்தை சேர்ந்த, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர். சுகந்து சேகர்ராய் சந்தித்து, ‘கல்யாண் சிங்கை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என புகார் அளித்தார்.
 
இந்நிலையில், இந்தத் தீர்மானத்திற்கு, மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றது.