தமிழக அரசு செலவில் ஜெயலலிதா விளம்பரம் : துரைமுருகன் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

 
 
சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் ஒரு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:–
 
ஒரு பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரசு செலவில் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் சுயவிளம்பரம் செய்யக் கூடாது. தங்களை முன்னிருந்தி விளம்பரம் செய்யக் கூடாது. அரசு விளம்பரத்தில் ஆட்சியாளர்கள் தங்களது கட்சியின் சின்னங்களை இடம் பெற செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
 
ஆனால், இந்த உத்தரவுகளை மீறி தமிழக ஜெயலலிதா ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் நிரந்தர முதலமைச்சர்ஜெயலலிதா என்ற வாசகங்களுடன் துண்டு பிரசுரங்கள், ராட்சஷ விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.
 
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது. எனவே, இந்த வகை விளம்பரங்களை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று துரைமுருகன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
அந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜனி, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நீலகண்டன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
 
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதம் செய்யும் போது, ‘அண்மையில் சேலத்தில் மழை பெய்தது. இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியர் ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுக்கிறார். அதில், தமிழக முதலமைச்சர் அம்மாவின் உத்தரவின்படி, சேலத்தில் கன மழை பெய்துள்ளது என்று கூறுகிறார். இப்படிப்பட்ட ஆட்சியர்கள் இருக்கும்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எப்படி தீவிரமாக அமல்படுத்துவார்கள்?’ என்று கூறினார்.
 
இதையடுத்து, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழக அரசு தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கை அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.