நன்கொடைகளால் கட்டிய பாழடைந்த பள்ளிக் கட்டிடத்தை முடிக்க திணறும் தமிழக அரசு பள்ளி ஆசிரியை !

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தில் துளுவபுஷ்பகிரி எனும் கிராமத்தில் பாழடைந்த பள்ளி கட்டிடத்தை பலரிடம் நன்கொடைக ளைப் பெற்று தமிழக அரசு பள்ளி ஆசிரியையான மீனா ராஜன் என்பவர் புதிய கட்டிடம் வருவதாக அவரது முகனூல் பதிவின் மூலமாக தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் பள்ளிக் கட்டிடத்தை நிறைவு செய்து தமிழக அரசாங்கத்திடம் விரைவில் ஒப்படைக்க இருப்பதாகவும் பள்ளிக் கட்டிடத்தை நிறைவு செய்ய நன்கொடையா ளர்கள் முன்வர வேண்டும் என்றும் கூறி யிருந்தார்.

பொதுநல நோக்கத்தைக் கருத்தில் கொண்டு செய்தி வெளியிடும் https://dhinasari.com இணைய தமிழ்ச் செய்தி தளம், தமிழகம் கல்வியில் சிறந்து திகழவேண்டும் என்றும் கல்விப் பணிக்காக ஏதேனும் உதவிட வேண்டும் எனும் நோக்கில் மட்டுமே தமிழக அரசு ஆசிரியை மீனா ராஜன் கூறியவற்றை செய்தி யாக வெளியிடுகிறது.

நமது செய்தியாளரிடம் ஆசிரியை மீனா ராஜன் கூறியதாவது :-

துளுவபுஷ்பகிரி எனும் கிராமத்தில் 1952-ம் வருடம் கல்நார் ஆன ஓட்டினால் இரண்டு வகுப்பு அறைகளுடன் கட்டப்பட்ட கட்டிடத்தில் தமிழக அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்ட பள்ளி இது.

62 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த பள்ளியில்
எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இருந்தபோதிலும் மிகுந்த சிரமத்திற்கிடையே அந்த கிராமத்தை சேர்ந்த பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை அந்த பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர்.

தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த பள்ளியை நடத்தி வந்த நிர்வாகிகள் பள்ளியை தொடர்ந்து நடத்த முடியாது என அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

ஆனால் அந்த பள்ளியில் சரியான கட்டிட வசதிகள் இல்லாததால் விதிமுறைகளின்படி பள்ளியை அரசாங்கம் ஏற்க மறுத்தது. தமிழக அரசு நிதி உதவி பெறும் மற்றும் அரசு ஆசிரியர்கள் பணியாற் றும் பள்ளியாக இருந்தாலும் அந்த பள்ளிக்கு அரசாங்க விதிமுறைகளின்படி அந்த பள்ளியின் மேம்பாட்டு பணிக்காக அரசால் எந்த உதவியும் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 17-02-1982 ஆம் வருடம் அரசு ஆசிரியர்க ளையும் பள்ளியின் நிர்வாகத்தையும் மட்டும் தமிழக அரசு தொடக்க கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

இந்த நிலையில் நானும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுளாம்பட்டு கிராமத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சிரமப்பட்டு படித்து தமிழக அரசு ஆசிரியையானவர். எனக்கு வயது 47. எனது கணவர் பெயர் ராஜன், அவர் அச்சுத் தொழில்நுட்ப தொழில் செய்து வருகிறார். எங்களுக்கு கீதம், நிஷாந்த், எனும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் தொழில் நுட்பப் படிப்பு பயின்று வருகின்றனர்.

சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் நான் கடந்த 2001- ம் வருடம் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவானை முகம் துவக்கப்பள்ளியிலிருந்து பணி இடமாற்றம் செய்யப்பட்டு மேற்படி பள்ளியில் ஆசிரியையாக ( தலைமை ஆசிரியர் பொறுப்பு) தற்போது பணியாற்றி வருகிறேன்

பாழடைந்த பள்ளிக் கட்டிடத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு கல்வி பயிலும், நடுத்தட்டு குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கில் வகுப்பறைகள் மட்டுமின்றி கணினி வசதியுடன் கூடிய அறை அமைக்கவும் முயற்சிகள் எடுத்துள்ளேன்.மேலும் பள்ளிக்காக புதிய கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டபோது துளுவபுஷ்பகிரி கிராமத்தை சேர்ந்த பணி ஓய்வு ஆசிரியர் கோவிந்தசாமி அவரது 20 செண்ட் நிலத்தை தானமாக பள்ளிக்கு கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து என்னால் 2425 சதுர அடியில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு பள்ளிக் கட்டிடம் 90% வரை கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. பள்ளி கட்டிட பணிக்கான மொத்த செலவு மதிப்பீட்டு தொகை ரூ.40 லட்சம் ஆகும். இதுவரை பலரால் நன்கொடை யாக ரூ.36 லட்சம் கிடைத்துள்ளது. கட்டிட பணியை நிறைவு செய்ய ரூ.4 லட்சம் தேவைப்படுகிறது. நன்கொடையாகப் பெறப்படும் தொகையை பாரத ஸ்டேட் வங்கி மூலம் நானும் வார்டு உறுப்பினர் ராஜன் என்பவரும் கையாண்டு வருகிறோம். கட்டிட பணியானது பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தினர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

துளுவபுஷ்பகிரி கிராமத்தை சுற்றியுள்ள ஏழு கிராமங்களில் 1500 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டி முடிக்கப் பட்டபின் 150 மாணவர்களுக்கு மேல் பயன் பெறுவார்கள். கிராமக் குழந்தைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற நிலை மாறி அனைத்து தரப்பினரும் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளியின் தரத்தை மேம்படுத்தவும் முயற்சிக்கப்படுகிறது எனக் கூறுவது மிகையாகாது.

கிராமக் குழந்தைகளின் தரத்தை மேம்படுத்தவும் பள்ளியின் தரத்தை உயர்த்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கட்டிடப் பணியை நிறைவு செய்ய தேவைப்படும் ரூ.4 லட்சம் நன்கொடையாக கிடைத்து விட்டால் கட்டிடப் பணியை முடித்து உடனடியாக தமிழக அரசாங்கத்திடம் கட்டிட ம்
ஒப்படைக்கப்படும் என்று தமிழக அரசு பள்ளி ஆசிரியை மீனா ராஜன் கூறியுள்ளார்.

மேலும் உள்கட்டமைப்பு பள்ளி சுற்றுச் சுவர் , மதிய உணவு சமையலறை போன்றவைகள் கட்டி முடிக்க நன்கொடை தேவைப்படுவதினால் நல்ல உள்ளம் கொண்டோர் இயன்ற அளவு பண உதவியோ, கட்டிட பொருள் உதவியோ அளிக்க ஆசிரியை மீனா ராஜன் கோரிக்கை விடுத்து கீழ் காணும் தொடர்பு விபரங்களாக தெரிவித்ததாவது :-

பணம் செலுத்துவதற்கான வங்கி கணக்கு விபரம் :-

SSA AIDED PRIMARY SCHOOL, THULUVAPUSHPAGIRI,
வங்கி கணக்கு எண் :32417332164
STATE BANK OF INDIA, SANTHAVASAI BRANCH,
IFSC CODE NO; SBIN0004879

cheques can be made in the name of SSA Aided Primary School, Thuluvapushpagiri,

வங்கி காசோலை மற்றும் வரைவோலை வேண்டிய முகவரி :-

D.Meenarajan, 28/2,12th Avenue, Vaigai Colony, Ashok Nagar,
Chennai -600 083 Mobile Number : 096001 42437

நாட்டில் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியை போதிக்க நன்கொடை மற்றும் கல்வி கட்டணம் என்று பொது மக்களிடம் வசூல் வேட்டை நடத்தி கோடி கோடியாக கொள்ளையடித்து சொத்து சேர்த்து கல்வி கொள்ளையர்கள் கல்வித் தந்தை என கூ றிக்கொண்டு உலகில் வலம் வருவது அனைவரும் அறிந்ததே!

இந்த நிலையில் தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு அரசு பள்ளி ஆசிரியையான மீனா ராஜன் என்பவர் அவரது சொந்த முயற்சியால் பாழடைந்த பள்ளி கட்டிடத்தை பலரிடம் நன்கொடைகளைப் பெற்று கட்டிட பணியை முடித்து உடனடியாக தமிழக அரசாங்கத்திடம் கட்டிடத்தை ஒப்படைக்க இருப்பதாக அறிவித்து கட்டிட பணியை 90% வெற்றிகரமாக முடித்து இருக்கும் செயலை செய்தமைக்கு ஆசிரியை மீனா ராஜன் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவரே! அவரது முயற்சியை https://dhinasari.com இணைய தமிழ்ச் செய்தி தளம் வாழ்த்தி பாராட்டுகிறது.

இந்த செய்தி வெளியீட்டால் ஆசிரியை மீனா ராஜ னுக்கு பள்ளி கட்டிட பணியை நிறைவு செய்ய தேவைப்படும் ரூ.4 லட்சம் நன்கொடை யாக கிடைக்க தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட பலர் முன்வருவார்கள் என்ற நம்பிக்கையோடு கல்வி பணிக்காக ஏதேனும் உதவிட வேண்டும் எனும் நோக்கில் மட்டுமே https://dhinasari.com இணைய தமிழ்ச் செய்தி தளம் இந்த செய்தியை வெளியிடுகிறது.

மேலும் மேற்படி பள்ளி கட்டிட பணிக்காக நன்கொடைகளை அளித்தோர்கள், நன்கொடைகள் அளிக்க இருப்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள்!

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.