சமூக வலைத்தளங்களின் தற்போதைய பார்வர்டிங் ட்ரெண்ட் – அறநிலையத்துறையை வறுத்தெடுப்பது. அண்மைக் காலமாக ஆலயங்களில் நடைபெறும் முறைகேடுகள், சிலைக் கடத்தல், சிலைகள் மாயம், நிர்வாகக் குளறுபடிகள், குத்தகை பாக்கி வசூலில் சுணக்கம், கோயில்கள் குறித்த ஏடுகளை முறையாகப் பராமரிமரிக்காமல் இருப்பது போன்ற பலவற்றுக்காக அறநிலையத்துறை அதிகாரிகளை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது. சில விவகாரங்களில் கிடுக்கிப் பிடி போட்டது.
இந்நிலையில், ஹிந்து ஆலயங்கள் மீட்பு குறித்து பாஜக., தேசிய செயலர் எச்.ராஜா பேசிய சில விஷயங்கள் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதேநேரம், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பிணக்கை ஏற்படுத்தின. இதனால் ஹெச்.ராஜாவுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் அறநிலையத்துறையினர்.
இந்நிலையில், தாமிரபரணி புஷ்கரம் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடிகளும், அறநிலையத்துறை இணை ஆணையரின் சுற்றறிக்கையும் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அறநிலையைக் காய்ச்சி எடுக்கும் வகையில் கருத்துகள் சமூக ஊடகங்களில் பரப்பப் படுகின்றன. வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் நீண்ட கட்டுரைகளையே எழுதி பரப்பி வருகின்றனர்.
எழுதியவர் பெயர் குறிப்பிடப் படாமல் பரப்பப் படும் கட்டுரைகளில் ஒரு கட்டுரை இது…
***
நல்லவர்கள் போல் ஓலமிடும் கோவில் கொள்ளையர்கள்! அயோக்யர்கள் துறையாக மாறிய அறநிலையத்துறை!!
தமிழகத்திலுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் திருடப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு அறிக்கை கொடுத்துள்ளது.
தமிழக கோவிலில் திருடப்பட்ட சாமி சிலை ஆஸ்திரேலியாவில் பிடிபடுகிறது.
மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் உண்டியல் பணத்தை அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் எடுத்து வைத்துக்கொண்ட வீடியோவும், கோவில் வளாகத்திலுள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் அமர்ந்து ஊழியர் ஒருவர் மது அருந்தும் வீடியோ காட்சிளும் வெளிவந்துள்ளது.
பழனி முருகன் கோவிலில் உற்சவர் சிலை திருடப்பட்டதாகவும் போகர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் சிலையான நவபாசான சிலையை கடத்த திட்டமிட்டதாகவும் அறநிலையத்துறையால் தமிழக கோவில்களுக்கு நியமிக்கப்பட்ட ஸ்தபதி முத்தையாவே வாக்குமூலம்
கொடுத்திருக்கிறார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா திருப்பனந்தாள் ஒன்றியத்திற்கு உட்பட்ட பந்தநல்லூர் பசுபதீஸ்வர் கோவில் சிலை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த அனைத்து சிலைகளும் கடத்தி விற்கப்பட்டதாகவும் அதற்கு பதிலாக புதிதாக செய்யப்பட்ட போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் எழுந்த புகாரை அடுத்து நடந்த விசாரணையில் அது உறுதி செய்யப்பட்டு அறநிலையத்துறை ஆணையர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தங்க விக்ரகம் செய்ய பக்தர்கள் அளித்த நூறு கிலோவுக்கும் மேற்பட்டதங்கத்தை விற்றுத் திண்றுவிட்டு தங்கமுலாம் பூசிய போலி விக்ரத்தை கோவிலில் வைத்த அறநிலையத்துறை அதிகாரி உமாதேவி கைது செய்யப்பட்டுள்ளார்…
திருப்பணி நடந்த அனைத்து கோவில்களிலும் ஐம்பொன் சிலைகள் அனைத்தும் கடத்தப்பட்டு அதற்கு பதிலாக போலியான சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக பொது மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. புகார்கள் வந்துள்ள கோவில்களில் இதுவரை சோதனை நடத்தப்பட்டுள்ள கோவில்கள் அனைத்திலும் சிலை திருட்டு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் நிலைக்கதவுகள் மற்றும் தேர்கள் செம்மரங்களால் செய்யப்பட்டவை என்று சொல்லப்படுகிறது.
பெரும்பாலான கோவில்களில் செம்மரத்தால் செய்யப்பட்ட நிலைக்கதவுகள் மற்றும் தேர்களைக் காணவில்லை. அனைத்தையும் பிரித்து விற்பனை செய்திருக்கிறார்கள்…
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இராண்டாயிரம் கோவில்களுக்கு மேல் காணவில்லை. அவை பட்டியலில் மட்டுமே குறிப்பில் உள்ளன. பட்டியலில் குறிப்பிட்டுள்ள இடங்களில் கோவில்கள் இல்லை.
அந்த கோவில்கள் மாயமானதான் மர்மம் என்ன? அந்த கோவில்களை யாருடைய உத்தரவின் பேரில் அறநிலையத்துறை இடித்தது? இப்படி ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தகுந்த ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளாக எழுந்துள்ள நிலையில்…
இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய திரு.ஹெச்.ராஜா ஜி அவர்கள் சிவன் குலநாசம் என்பார்கள். கோவில் சொத்தை பாதுகாக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகளே கொள்ளையடிக்கிறார். அவர்கள் குடும்பம் நாசமாகிவிடும் என்கிற அச்சம் கூட அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. கோவில் சொத்தை கொள்ளையடிப்பவன் குடும்பம் நாசமாய் போகட்டும் என்று நாம் சாபமிட்டாலும் அது தவறில்லை. காரணம் அந்த அளவிற்கு கோவில் சொத்துக்களை திருடியதோடு கோவில்களையும் அழித்திருக்கிறார்கள் என்று தான் சொன்னார்.
அறநிலையத்துறை ஊழியர்கள் வீட்டுப் பெண்களை தவறாக பேசினார் என்கிற குற்றச்சாட்டு அபாண்டமான பொய்…
அறநிலையத்துறை ஊழியர்களை திரு.ஹெச்.ராஜா அவர்கள் விமர்சித்ததாகக் கூறி அவருக்கு எதிராக போராட்டம் நடத்தும் அறநிலையத்துறை ஊழியர்கள் இரண்டாயிரம் கோவில்களை காணவில்லை என்று திரு.ஹெச்.ராஜா அவர்கள் கூறிய குற்றச்சாட்டை இதுவரை யாரும் மறுக்கவே இல்லையே?
மேலும் திரு.ஹெச்.ராஜா அவர்கள் கூறிவருவது இரண்டாயிரம் கோவில்களை காணவில்லை என்கிற குற்றச்சாட்டு தவறானது அறநிலையத்துறை பட்டியலில் உள்ள அனைத்து கோவில்களும் குறிப்பிட்ட அதே இடத்தில் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. சந்தேகம் இருந்தால் வாருங்கள் காணாமல் போனதாக நீங்கள் சொன்ன இரண்டாயிரம் கோவில்களை மக்கள் முன்னால் நாங்கள் காட்டுகிறோம் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் ஒருவர் கூட இதுவரை தைரியமாகச் சொல்லவே இல்லையே?
பல ஆயிரம் கோவில்களை காணவில்லை. பல ஆயிரம் கோவில்களில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல ஆயிரம் சிலைகள் திருடப்பட்டுள்ளன.
ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் கோவில் நிலங்கள் அறநிலையத்துறை அதிகாரிகளால் தனியாருக்கு மடைமாற்றி பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல்களையும் மோசடிகளையும் எதிர்த்து திரு.ஹெச்.ராஜா அவர்கள் ஆலய சொத்துக்களையும் ஆலயங்களையும் காக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.
தாங்கள் செய்த ஊழல்களும் மோசடிகளும் தற்போது ஆதாரத்துடன் வெளிவருவதால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் வெளிப்படையாக துடிக்க முடியாத அறநிலையத்துறை ஊழியர்கள் தங்களை பரிசுத்தவான்களாக காட்டிக்கொள்ள அறநிலையத்துறையில் நடந்த ஊழல்களையும் மோசடிகளையும் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிவரும் திரு.ஹெச்.ராஜா அவர்கள் மீது பழிசுமத்தும் காழ்ப்புணர்ச்சியில் அவர்மீது வேண்டுமென்றே திட்டமிட்டு தங்கள் வீட்டுப் பெண்களை அவர் அவதூறாக பேசினார் என்று ஏக்கர் கணக்கில் பொய் பரப்பி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊடக நிருபர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அறநிலையத்துறை ஊழியர்கள் சொல்வது போல ஒரு விமர்சனத்தை திரு.ஹெச்.ராஜா ஜி அவர்கள் சொன்னதாக அவதூறு பரப்புவது அபத்தமானது.
ஊழல் மலிந்த அறநிலையத்துறையே ஆலயத்தை விட்டு வெளியேறு