மதுரை: அதிமுக., அரசை திமுக., வால் அசைக்க முடியவில்லை என்று கூறினார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,. அப்போது அவர், பெட்ரோல் -டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர பாஜக., அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
தமிழகத்தில் நேர்மறையான அரசியல் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் எதிர்மறையான அரசியலே நடக்கிறது.
அதிமுக அரசை திமுக.,வால் அசைக்க முடியவில்லை. தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் நடக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
வரும் திருமங்கலம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டியிடவே பாஜக., விரும்புகிறது.
இலங்கை இறுதிப் போரின்போது திமுக, காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாடகமாடியுள்ளது. முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று கூறினார்.