செய்வீ ர்களா ? செய்வீ ர்களா ? நீங்கள் செய்வீ ர்களா ? நடிகர் அமீர்கானை அறைந்தால் ரூ 1.லட்சம் பரிசு

டெல்லியில் பிரபல இந்தி நடிகர் அமீர்கான், நேற்று முன்தினம்ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ‘நாட்டின் சகிப்பின்மை பிரச்சினையால் இந்தியாவை விட்டு வெளியேறலாமா? என்று மனைவி கிரண் என்னிடம் கேட்டார். இது நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்து வருவதையே காட்டுகிறது’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அமீர்கானின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும்,வலுத்து வருகிறது. யாரும் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் அதை தடுக்கக் கூடாது என்று பாரதீய ஜனதா பாராளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத் கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சில தலைவர்களும் அமீர்கான் தான் விரும்பும் எந்த நாட்டுக்கும் போகலாம் என்று தெரிவித்தார். பல சமூக ஊடகங்களில் அவர் தேச விரோத சக்தி என்றும் விமர்சிக்கப்பட்டு உள்ளார்.

சகிப்பின்மை குறித்து அமீர்கான் தெரிவித்தது, விசுவரூபம் எடுத்துள்ள நிலையில், நானோ, எனது மனைவியோ இந்த நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை. அந்த எண்ணமும் எங்களிடம் இல்லை என கூறி உள்ளார்.

இந்நிலையில், ஆமீர்கான், தான் நடித்துவரும் டங்கல் என்ற படத்தின் படபிடிப்பிற்காக பஞ்சாப் மாநிலம் லூதியானாவுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் தங்கியிருந்த ஓட்டலின் வெளியே, பஞ்சாப் சிவசேனை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியது

ஆமிர்கானின் போட்டோக்களை போராட்டத்தின்போது, எரித்து சிவசேனா எதிர்ப்பை காட்டியது. அப்போது பேசிய சிவசேனையின் பஞ்சாப் மாநில தலைவர் ராஜிவ் தாண்டன்

ஆமீர்கானை கன்னத்தில் அறைந்தால், அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தரப்படும். இந்த ஓட்டலின் மேனேஜரோ, அல்லது ஊழியரோ, திரைப்படத்தில் பணியாற்றும் ஊழியர்களோ கூட ஆமீர்கானை அடித்து ரூ.1 லட்சம் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.

தைரியமும், தேசப்பற்றும் கொண்ட இந்தியர்கள், அமீர்கானை லூதியானாவில் வைத்து அடித்து ரூ.1 லட்சத்தை பரிசாக பெறலாம் என்று கூறினார். இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வன்முறையை தூண்டிய பேச்சுக்காக ராஜிவ் தாண்டன் கைது செய்யப்படலாம் என்று பரவலாக கூறப்படுகின்றது.