கரூர்: மகனே தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
கரூர் மாவட்டம் வாங்கல் காவல் சரகத்திற்கு உட்பட்ட N புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி வயது 65. இவரது மகன் தங்கவேல் வயது 40.
நேற்றிரவு கந்தசாமி தனது வீட்டில் கட்டிலில் படுத்து உறங்கும்போது அங்கு வந்த தங்கவேல் தனது தந்தையின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார.
இந்த சம்பவத்திற்கு பிறகு கொலையாளி தப்பி ஓடியுள்ளார் இது குறித்து வாங்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையான கந்தசாமி உடலை கரூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
து தப்பி ஓடிய கொலையாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.