கரூர்: ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்கலாம் என்று கூறியுள்ளார் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை.
கரூரில் மக்கள் குறைதீர்க்க மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளகளிடம் பேசினார் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை. அப்போது அவர் கூறியதாவது:
குற்றப் பின்னனி கொண்ட அரசியல்வாதிகள் தமிழகத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது தவறான கருத்து. பார்லிமெண்டில் தேவையான சட்ட திருத்தம் ஏற்படுத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கருதினால் அதற்க்கான நடவடிக்கையை பாரளுமன்றம் பரிசீலிக்கும்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசால் தான் முடியும்.ஆகவே எங்களது நாடாளுமன்ற, ராஜ்யசபா உறுப்பினர்கள் 50-பேர் வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் குரல் எழுப்புவோம்.
இலங்கை உள்நாட்டு போரில் அப்போதைய திமுக-காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு உதவியதால் தான் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
இதன் அடிப்படியிலேயே போர் முடிந்தவுடன் நடந்த குடியரசு இந்திய தினவிழாவில் சிறப்பு விருந்தினராக ராஜபக்சே அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இதனால் இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது போர் குற்றம் புரிந்ததாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அதே சமயம் ராஜீவ்காந்தி, இந்திராந்தி போன்ற தலைவர்கள் கொலை செய்யப் பட்டதை ஆதரிக்கவில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வருபவர்கள் தொடர்ந்து நாங்கள் நிரபராதி என கூறி வருகின்றனர்.
அதே சமயம் கடந்த 20-30-ஆண்டுகளாக சிறைவாசத்தில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதனையே மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டு வந்தார். எனவே அவர்களை விடுவிக்கலாம்… என்றார் தம்பிதுரை.