சென்னை: ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் 2வது போஸ்டர் இன்று அதிகாரபூர்வ டிவிட்டரில் வெளியானது.
`காலா’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் `பேட்ட.’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா என இரட்டை ஹீரோயின்கள். இருவரும் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இது… அதுவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் ரஜினியுடன் நவாசுதின், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா என ஒரு பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது. நடிகர் சசிகுமார் இந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் சசிகுமார் பகுதி இருக்கும் என்கிறார்கள்.
இதனிடையே குரு பெயர்ச்சியான இன்று ஒரு பெயர்ச்சியாக முதல் லுக் போஸ்டரை வெளியிட்ட பேட்ட டீம் இன்று செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. இதில், கிடா மீசையுடன் ரஜினி, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக ஒரு கிராமத்து லுக்கில் காணப் படுகிறார்.