மதுரை : சிம்மக்கல் பகுதியில் உள்ள சேதுபதி அரசு மேனிலைப் பள்ளியில் நூலகம் மற்றும் காணொளிக் காட்சியகம் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
நூற்றாண்டைக் கடந்து அடுத்த நூறாண்டைக் கடந்த பயணிக்கின்ற இந்த பள்ளி மகாகவி பாரதி பணி புரிந்த பள்ளி. இதில் இன்று நூலகத்தை திறந்து வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
முதல்வர் உட்கட்சிப் பூசலைப் பேச தில்லி செல்ல வேண்டிய அவசியமில்லை. பிரதமர் மோடி நலத் திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டு வருவதற்கான சந்திப்பு தான் முதல்வர் தில்லியில் பிரதமர் சந்திப்பு.
பிஜேபி திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை தள்ளிப் போட எந்த முயற்சியும் எடுக்க வில்லை. தமிழகத்தில் பிஜேபியின் வாக்கு வங்கி அதிகரித்து இருக்கிறது.
ரபேல் போர் விமான ஊழல் என்று இல்லாத ஒன்றைச் சொல்லி பொய்ப் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸுக்கு, அதுவே அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைய லீழ்ச்சி அடைய முழுக் காரணமாக அமையும்.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கும் திட்டம் உறுதி. அதற்கான நிதி, பணி தொடங்கும் போது தான் ஒதுக்கப்படுமே தவிர, திட்டம் குறித்து சந்தேகம் தேவை இல்லை… என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
அவரது பேட்டியின் காணொளி…