கவிஞர் வைரமுத்து மீது சிலர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளை #மீடூ ஹேஷ்டேக் போட்டு, பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் டிவிட்டரில் வெளிப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து, அவரது செயலை ஆமோதித்தும் ஆதரவு தெரிவித்தும், பாடகி சின்மயியும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வெளிப்படுத்தினார். சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில், வைரமுத்து வீட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் அவரின் லீலைகள் வெளிவரும், எனக்கு பாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அவரது செயல்களை அம்பலப் படுத்துவேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாடகி சின்மயி இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் 5 வருடத்திற்கு முன்பே இந்தக் குற்றச்சாட்டு குறித்து பேசியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒரு முறை சுவிட்சர்லாந்துக்கு கச்சேரி தொடர்பில் சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்டார்கள். நானும் என் அம்மாவும் மட்டுமே இருந்தோம். அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வந்து, கவிஞர் வைரமுத்து உங்களுக்காக ஹோட்டல் ரூமில் வெயிட் பண்ணுகிறார் எனக் கூறினார். நான் அப்போதே அவர் முகத்திரையைக் கிழித்திருப்பேன். அவர் மீது திரையுலகம் வைத்திருந்த மரியாதைக்காக விட்டுவிட்டேன் எனக் கூறியுள்ளார்.
I just got from the organizers at Switzerland who KNEW of @Vairamuthu s behaviour.
I will be getting in touch with them. pic.twitter.com/NvDUlyUMJf— Chinmayi Sripaada (@Chinmayi) October 10, 2018
வைரமுத்து பற்றி நான் 0.2 சதவீதமே பேசி உள்ளேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் வைரமுத்துவின் இன்னும் பல லீலைகளைச் சொல்வார்கள். இந்த உண்மையை சொல்வதால் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் கவலையில்லை எனக் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் சந்தியா மேனன் போல், மற்றவரின் அனுபவத்தையும் தன் டிவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் சின்மயி. பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர், பாடகர் ஓஎஸ் தியாகராஜனிடம் இசை கற்றுக் கொண்டிருந்த போது, ஆபோகி ராகம் குறித்த விளக்கத்தில் தேவையற்ற விதத்தில் சீண்டலில் ஈடுபட்டதால், தாம் அதன் பின் பாட்டு கற்றுக் கொள்வதையே விட்டுவிட்டதாக வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் என்று கூறியுள்ளார் சின்மயி!
இப்போது #மீடூ இன்னும் பலர் குறித்து அதிர்ச்சியுடன் பேசவைத்துக் கொண்டிருக்கிறது.
Unmaiya poiya
As per news agency item it appears he is running a girls /women’s hostel in Chennai. Govt should investigate and find out whether proper permission to run such hostel by his family is there or not Now he is involved in sexual harassment case it should be closed immediately