கீழடி அகழாய்வில் தங்க ஆபரணம் ஒன்று கிடைத்ததாக தமிழக அரசு கூறிய பதில் மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கீழடியில் அகழாய்வுப் பணிகளை தொடரவும், அருங்காட்சியகம் அமைக்கவும் உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தா. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளவை..
நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்துள்ளன
7 ஆயிரத்துக்கும் அதிகமான பழமையான பொருட்கள் கிடைத்துள்ளது. முதன் முதலாக தங்க ஆபரணம் ஒன்று கிடைத்துள்ளது.
இந்த பொருட்களின் காலத்தை கண்டறிவதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் கட்ட பணிகளை தொடங்குவதற்காக மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்கப் பட்டுள்ளது. – என்று கூறப் பட்டது.
அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளவற்றை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.