ஸ்ரீரெட்டியின் ரெட்டிலீக்ஸ் புயலுக்குப் பின் அடுத்த புயலாய் உருவெடுத்து கோலிவுட்டை கலங்கடித்து சாய்த்து வருகிறது சின்மயிலீக்ஸ். இதனால் சாய்ந்த மரங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தையும் சேர்த்தே புரட்டிப் போட்டு வருகிறது. சாமானிய கவிஞனுக்கும் சாதாரண கவிஞருக்கும் அரசியல் செல்வாக்குடன் பலரின் வாழ்க்கையில் ஆட்டையப் போட்ட கவியரசுவுக்கும் வேறுபாடு இருப்பதால் தானோ என்னவோ… இந்தப் பரபரப்பு பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பாரம்பரியத் தமிழன் உலகுக்கு நன்மை செய்வான். கமிஷன்களிலும் காண்ட்ராக்ட்களிலும் புரையோடிப் போயுள்ள வர்த்தகத் தமிழன், அரசியல் செல்வாக்குக்கு அடிபணிந்து நிற்பான். இப்படி அரசியலில் காரியம் சாதித்துக் கொள்வதற்காக எத்தனை தகிடுதத்தங்களைச் செய்தார்களோ இந்தத் தரகர்கள் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துச் சுதந்திரத்தின் அளவுகோலை நூல் பிடித்தாற்போல் வெளிப்படுத்தி வருகிறார்கள்!
அந்தச் சுதந்திரத்தை இப்போது மீடூ #MeToo இயக்கம் பெற்றுள்ளது. சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறிய குற்றச்சாட்டுக்கு மௌனத்தையே பதிலாகத் தந்த வைரமுத்து மீது கேள்விக் கணை தொடுத்திருக்கிறார் சமூகத் தளப் போராளி நடிகை கஸ்தூரி!
பொதுவாக பெண்கள் ஏதாவது எதிர்க்கேள்வி கேட்டாலே உடல் ரீதியாக தாக்குதல் தொடுக்கும் ஆணாதிக்க சமூகத்தில், அனைத்தையும் சகித்துக் கொண்டு சிலர் நியாயமான கேள்விகளை முன்வைக்கிறார்கள். இதனால் அவர்கள் இழப்பது உடல் ரீதியாக இழைக்கப்படும் அவமானங்களை விட சமூக ரீதியாக இழைக்கப் படும் மான இழப்பு! கொச்சை வார்த்தைகளால் குதறியெடுக்கும் சாக்கடை மனிதர்கள் நிரம்பிய சமூகத்தில் கருத்தைத் தெரிவிக்கவே கதறி அழும் நிலையில் பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதை அரசியல் பின்பலமுள்ள வைரமுத்து போன்றோர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்!
குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இயலாத கோழை, சமூகத்தின் பரிதாபத்தைப் பெறுவதற்காக சாதியை இழுப்பது அரசியல் அல்லாமல் வேறென்ன என்ற கேள்வியும் கூடவே முன்வைக்கப் படுகிறது சமூகத் தளங்களில்!
இப்போது, நடிகை கஸ்தூரி, பாடகி சின்மயிக்கு ஆதரவாக ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் கேள்விகள் இப்போது சமூகத் தளத்தில் பெரிதும் பகிரப் பட்டு வருகிறது. சின்மயி வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல், காய்த்த மரம் கல்லடி படும் என்ற ரீதியில் கருத்தை தெரிவித்து விட்டு கமுக்கமாக இருக்கும் கவிஞருக்கு ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார் கஸ்தூரி!
உண்மையை காலம் சொல்லுமா? ஏன் ? நீங்களே சொல்லலாமே ? சின்மயியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள். அது மஞ்சள் பத்திரிக்கையில் வந்த கிசுகிசு அல்ல, அலட்சியப்படுத்துவதற்கு. உங்கள் உதாசீனமும் மௌனமும் உங்கள் மேல் விழுந்துள்ள சந்தேகத்தை வலுக்க செய்கிறது. #Vairamuthu
உண்மையை காலம் சொல்லுமா? ஏன் ? நீங்களே சொல்லலாமே ?
சின்மயியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள். அது மஞ்சள் பத்திரிக்கையில் வந்த கிசுகிசு அல்ல, அலட்சியப்படுத்துவதற்கு. உங்கள் உதாசீனமும் மௌனமும் உங்கள் மேல் விழுந்துள்ள சந்தேகத்தை வலுக்க செய்கிறது. #Vairamuthu
— Kasturi Shankar (@KasthuriShankar) October 10, 2018
**
வைரமுத்து அவர்களை நோக்கி சின்மயி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை பற்றி என் கருத்தை பலரும் கேட்கிறார்கள். வைரமுத்து அவர்களுடன் நான் பேச கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்திலும் தமிழையும் பெண்ணியத்தையும் மட்டுமே பகிர்ந்துகொண்டார். தவிர, அவரைப்பற்றி பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன். ஒரு எதிர்மறையான கருத்தும் இதுவரை என் காதுக்கு எட்டியதில்லை. அண்ணாந்து பார்த்த ஒருவர் மீது சரமாரியாக புறப்பட்டு வரும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எனக்கு எதிர்பாராத அதிர்ச்சியே. ஒப்புக்கொள்கிறேன்.
சின்மயியும் எனக்கு நல்ல தோழியே ஆவார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் ஒருங்கே அமைந்த துணிவுள்ள பெண். அவர் முன்னெடுத்துவைக்கும் குற்றச்சாட்டுக்கள் மிகவும் வன்மையானவை. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபிறகே சின்மயி பேச தொடங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்த சிக்கலான விஷயத்தில் சின்மயி எழுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு திரு வைரமுத்து அவர்கள் பதில் சொல்லும்வரை வெறும் பார்வையாளரான நமக்கு அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்லும் தகுதியோ உரிமையோ இல்லை என்று கருதுகிறேன்.
It is only right that we wait for the other side to present his version. Any delay or dallying in that will only serve to confirm the allegations against him. **
– இது கஸ்தூரியின் பேஸ்புக் பதிவு. கஸ்தூரியின் இந்தக் கேள்விக் கணை கவிஞரை இப்போது பதம் பார்த்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கலங்கிப் போயுள்ள கவிஞர் கண்ணீர் மல்க மீண்டும் ஒரு கற்பனைக் காணொளியை கசிய விடலாம் என்று கிசுகிசுக்கிறார்கள்!
கவிபà¯à®ªà¯‡à®°à®°à®šà®¾ இலà¯à®²à¯ˆ காமபà¯à®ªà¯‡à®°à®°à®šà®¾ எனà¯à®ªà®¤à¯ˆ காலம௠ஒர௠போதà¯à®®à¯ சொலà¯à®²à®¾à®¤à¯. இவன௠கழà¯à®µà¯à®•à®¿à®± மீனில௠நழà¯à®µà¯à®•à®¿à®± மீனà¯. ஜாதியை எடà¯à®¤à¯à®¤à¯ கமà¯à®ªà®¿ நீடà¯à®Ÿ பாரà¯à®•à¯à®•à®¿à®±à®¾à®©à¯. உளà¯à®³à¯‡ தளà¯à®³à®¿ தகà¯à®¨à¯à®¤ à®®à¯à®±à¯ˆà®¯à®¿à®²à¯ விசாரிதà¯à®¤à®¾à®²à¯ உணà¯à®®à¯ˆà®¯à¯ˆ ககà¯à®•à¯à®µà®¾à®©à¯.