ஆளுநருக்கே அறிவுரை… இது ஆழ்வார்பேட்டை ஆண்டவர் ஸ்டைல்..!

ஆளுநர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஆளுநர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சேலம் செல்லும்முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழையை காரணம் காட்டி இடைத் தேர்தலை தமிழக அரசு தள்ளிப் போடுவது நாடகம் ஆடுவதை காண்பிக்கிறது என்றும், இதற்காக தேர்தலை தள்ளி போட வேண்டுமா என்றும் கமல் கேள்வி எழுப்பினார்.

சிலைகடத்தல் விவகாரத்தில் கோயிலுக்கு சொந்தமான சிலைகள் என்பது நம்முடைய சொத்து தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அதனை பாதுகாக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் உதவ முன் வந்தபோதும், எங்களுக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை என தட்டிக்கழித்து விட்டனர்.

நிதின் கட்கரியின் கருத்துக்கு, உண்மையை பேசக்கூடிய சில அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

வைரமுத்து விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் கருத்து சொல்ல வேண்டும்.

ஆளுநர் விவகாரத்தில் தவறு இருக்கும் பட்சத்தில் பதவி விலக வேண்டியது தான் தைரியமான அரசியவதிக்கு அழகு. அதை நிரூபிக்கும் வரை அவர் தன் பதவியில் இருக்கக் கூடாது என்றும், ஆளுநர் என்பவர் மிகவும் ஜாக்கிரதையாகவும் மரியாதை யாகவும் பேச வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிற ஓ.பி.எஸ் பேச்சுக்கு, அது வெறும் பேச்சு மட்டும் தான் எனக் கூறினார் கமல்.