சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி கொடுக்கப் பட்ட விவகாரத்திலும், தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வரும் நடமுறை சிக்கல்களுக்கும் கம்யூனிஸ்ட்டுகளே காரணம் என்று குற்றம் சாட்டிப் பேசினார் பந்தள மகாராஜா.
கேரளத்தைச் சேர்ந்த பந்தளம் மகராஜா மகம் திருநாள் கேரள வர்ம மகராஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகருக்கு வந்தார். அவரை ஐயப்ப பக்தர்கள் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பந்தள மகாராஜா. அப்போது அவர், இன்று நாடு முழுவதும் உருவாகியுள்ள சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்கள் செல்லலாம் என்ற நீதிமன்ற உத்திரவால் உருவாகியுள்ள பிரச்சனை அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பெண்களை ஆலயத்திற்குச் செல்லலாம் என்று கூறி, நீதிமன்றத்திற்கு செல்ல வைத்ததே கம்யூனிஸ்ட்களால்தான்! அவர்கள் உருவாக்கி வைத்த பிரச்னையே இது.
இந்த பிரச்சனையின் முதல் கட்டமாக, பெண்கள் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பதை முஸ்லீம்கள் தான் குரல் எழுப்பினர். ஒவ்வெரு ஆலயத்திற்கும் ஆகம விதிகள் உண்டு, ஆகம விதி சட்டத்திற்கு உட்பட்டதல்ல! ஆச்சாரம், நம்பிக்கைகளை நீதிமன்றம் கட்டுபப்டுத்திட முடியாது.
நாளை பம்பையில் பெரிய அளவில் அமைதியான முறையில் அகிம்சை வழியில் போராட்டம் நடக்கிறது. பக்தர்கள் அதிக அளவில் இதில் கலந்து கொள்ள வேண்டும். இந்தத் தீர்ப்பை வாசித்தவர் சபரிமலை வந்தவர் கிடையாது. வழக்கைத் தொடுத்தவரும் ஆலயத்திற்கு வந்தது கிடையாது. இந்த வழக்கில் ஒரு நீதிபதியின் கருத்து மட்டுமே தீர்ப்பு அல்ல மற்ற நிதிபதிகள் அனைவரும் எதுவும் கருத்துகளை கூறவில்லை.
21ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு வருகிறது. அதுவரை மண்டல பூஜைக்காக நடை திறக்க வேண்டியது உள்ளது. அதுவரை காத்திருக்க முடியுமா? பூஜைகளுக்கான காலம் முடிந்துவிடும்.
நங்கள் மக்களை சந்திக்கும் பகுதிகளில் எல்லாம் தாய்மார்கள் தங்களது விட்டுப் பெண் பிள்ளைகளை சபரிமலைக்கு அனுப்ப மாட்டேன் என்று உறுதிபட கூறுகின்றனர்.
நாங்கள் கடந்த 14ஆம் தேதி தில்லியில் பேரணி நடத்தி பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை அனைவருக்கும் மனு கொடுத்து உள்ளோம். நாளை சபரிமலையில் தேவஸம் போர்டு அதிகாரிகள் முன்னிலையில் மேல் சாந்தி தேர்வு நடக்கிறது. 10 பேரில் ஒருவரை எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தேர்வு செய்வார்கள். அது வேறு!
எங்கு சென்றாலும் நாளை பம்பைக்கு வாருங்கள். சட்டத்திற்கும் உணர்வுக்கும் தொடர்பில்லை.
நீதிமன்ற மேல் முறையீடு தீர்ப்பை அய்யப்பன் பார்த்துக் கொள்வான். காத்திருப்போம்! நிச்சயமாக நல்லது நடக்கும் என அனைவரும் நம்புவோம் என்று பேசினார் பந்தள மகாராஜா.