November 30, 2021, 2:33 am
More

  சுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை!

  சென்னை: சினிமா இயக்குனர் சுசி கணேசன் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, திரை இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை பாயிண்ட் பாயிண்டாக பதிலடி கொடுத்துள்ளார். அவரது விளக்கத்தில்...

  maxresdefault 15 - 1

  சென்னை: சினிமா இயக்குனர் சுசி கணேசன் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, திரை இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை பாயிண்ட் பாயிண்டாக பதிலடி கொடுத்துள்ளார். அவரது விளக்கத்தில்…

  1.மிரட்டல் கட்டம் முடிந்து கணேசன் பல வகைகளில் யோசித்து பொய்களை அவிழ்த்து விடுகிறார். அப்பட்டமான பொய்கள் மூலம் என்னை சாய்த்துவிட முடியாது. சுசி கணேசன் தீபம் தொலைக்காட்சிக்கு பேட்டி தந்த வருடம் 2005. அவரை விருந்தினராக அழைத்தது நிர்வாகம் தான். நானல்ல.

  2.தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராக, VJ ஆக இருந்ததால் பல இலக்கிய புத்தக நிகழ்ச்சிகளை நட்புக்காக தொகுத்து வழங்கியிருக்கிறேன். சுசி கணேசன் குறிப்பிடும் புத்தகத்தை கலைஞன் பதிப்பகத்திற்காக (இரண்டு வருடங்களுக்கு முன் கூட என் நூலொன்றை பதிப்பித்தது கலைஞன் பதிப்பகம்) நான் தொகுத்து வழங்கியது அதற்கும் முன்பு. அப்போதும் சுசி கணேசன் என்பவர் என் நண்பர் இல்லை.

  3.நானும் ஜெரால்டும் சுசி கணேசனை எங்கள் ஸ்டூடியோவிற்கு ஒரு நாளும் அழைத்ததில்லை.

  4.என் முதல் தொகுப்பு வந்த வருடம் 2003. என் முதல் ஆவணப்படம் வந்த வருடம் 2002. எனக்குப் படங்களுக்கு பாட்டெழுதும் ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை. நான் உதவி இயக்குநராக வேலை செய்ய விருப்பப்படும் அளவு தகுதியான இயக்குநராக சுசி கணேசன் எப்போதும் இருந்ததில்லை.

  5. எனக்கு போதுமான அளவு புகழ் இருக்கிறது. என் மீது நடந்த அத்துமீறலை சொல்வதால் எனக்கு தான் வாய்ப்புகள் குறையும். தகாத பேச்சுகள் பெருகும். Problemetic பெண்ணாக அடையாளப் படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப் படுவேன். இதில் இழப்பு எனக்குத் தான். இந்த சமூகம் குற்றவாளிகளாக இருந்தாலும் ஆணுக்குத் தான் சலுகைகளை அளிக்கும்.

  6. என் body language குறித்து விமர்சனம் வைக்கிறார் சுசி கணேசன். குற்றவாளிகள் தான் கூனி குறுகி கண்ணீரும் கம்பலையுமாக நிற்க வேண்டும். என் மிடுக்கை எதற்காகவும் விட்டுத் தர முடியாது.

  7. பெண்ணியம் என்பது பாலின சமத்துவத்தில் அக்கறையிருப்பவர்கள் நம்புவது. பேஷன் அல்ல.

  8. நான் எழுதும் கவிதைகளில் இருக்கும் வார்த்தைகள் சுசி கணேசன் போன்ற ஆதிக்க மனம் இருப்பவர்களுக்கு கொச்சையாகத் தான் தெரியும். இலக்கியம் வாசித்திருந்தால் ஏன் திருட்டுப்பயலே எடுக்கப்போகிறார்?

  ஆக சுசி கணேசன் சத்தியம் செய்து, கடவுளை சாட்சியாக கூப்பிட்டு பொய்கள் தன்னைக் காப்பாற்றும் என நம்புகிறார். ஒரு குற்றத்தை மறைக்க அடுக்கடுக்காய் எவ்வளவு குற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. கடும் பிரயத்தனம் தான். 2005-ல் இருந்த லீனா மணிமேகலை இல்ல நான். சுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாகி விட்டது. என் மடியில் கனம் இல்லை. உரம் மட்டுமே! – என்று கூறியுள்ளார்.

  #மீடூ #MeToo விவகாரம், தற்போது மேடைகளிலும் ஊடகங்களிலும் பெண்களுக்காகப் பரிந்து பேசிய ஆண்கள் பலரது உள்மன  வக்கிரங்களையும் பெண்ணியவாதிகளின் மௌனங்களையும் இந்த சமூகத்துக்கு வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து, வைரமுத்துவுக்கு ஆதரவாகக் களம்  இறங்கிய பாரதிராஜா, விஷால், ராதாரவி உள்ளிட்ட ஆணாதிக்க வர்க்கத்தின் வக்கிரபுத்தி வெளித் தெரிவதால், திரையுலகினர் பலரும் வாய்மூடி மௌனம் காத்து வருகின்றனர்!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-