சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீதான 11-வது பாலியல் புகாரை மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள் சொல்கிறார்.
மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் வாசுதேவனின் மனைவி ஹேமமாலினி தனது பேஸ்புக் பக்கத்தில், ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார்.
வைரமுத்துவின் தமிழ், கவிதைகளுக்கு மட்டும்தான் மதிப்பளிப்போமே தவிர, வைரமுத்து என்ற தனிமனிதனுக்கு அல்ல என்றும், தனிப்பட்ட வகையில் பார்த்தால் அவர் மதிக்கத்தக்கவர் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தாம் சன் ம்யூசிக்கில் பணி செய்த போது, வைரமுத்து ஓர் இளம் பெண்ணிடம் நடந்து கொண்டதை தாம் நேரில் பார்த்து, அது குறித்து அப்போதே நட்பு வட்டத்தில் பகிர்ந்ததாகவும், இப்போது அதை பலரும் நினைவு கூர்ந்து தனக்கு தெரிவிப்பதாகவும் கூறியுள்ள ஹேமமாலினி, எப்படிப்பட்ட மன அழுத்தங்களுக்கு இடையே சின்மயி இத்தகைய வார்த்தைகளை வெளிப்படுத்தியிருப்பார் என்பதை ஒரு பெண்ணாக இருந்து அனுபவித்தால் தான் தெரியும் என்று கூறியுள்ளார்.