ஜெயக்குமார் தொடர்பாக என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் நாறிவிடும் என்று எச்சரித்துள்ளார், டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.
வாட்ஸ் அப் மூலம் வைரலாக்கி வரும் சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியான விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியுள்ளார்.
முன்னதாக, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேரில் குற்றம் சாட்டப் பட்டு ஓர் ஆடியோ வெளியானது. மேலும், டி.ஜெயக்குமார் என்பவருக்கு மகன் பிறந்ததாக பெயரிட்டு, குழந்தை பிறப்பு சான்றிதழ் ஒன்றும், டி.ஜெயக்குமார் என்பவர் பேசுவதாக ஆடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தார் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல். அப்பொது அவர், பாதிக்கப்பட்டவர்தான் அந்த ஆடியோ உண்மை இல்லை என்று நிரூபிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஜெயக்குமார் சம்பந்தமான வீடியோ, ஆடியோ என்னிடம் உள்ளது. அதை நான் தற்போது வெளியிடப் போவதில்லை. தன் மீது தவறில்லை என்கிற போது, டி.என்.ஏ சோதனை மூலம் தாம் குற்றமற்றவர் என்பதை ஜெயக்குமார் நிரூபிக்க வேண்டும் என்று கூறினார் வெற்றிவேல்.
ஆனால், டி.ஜெயக்குமார், அந்த ஆடியோவில் உள்ள குரல் தனதல்ல என்றும், தன் குரலை டப் செய்து வெளியிட்டவர்கள் மீது தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.