தகுதி நீக்கம் செய்யப் பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் குறித்த வழக்க்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் குற்றாலத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான ரிசார்ட்ஸில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்று தாமிரபரணி புஷ்கர விழாவின் கடைசி நாள் என்பதால், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையில் புஷ்கர நீராடினர்.
இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை, துணை முதல்வர் ஓபிஎஸ்., அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி உள்ளிட்டோர், மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் கூடி, கட்சி நிலவரம் குறித்தும் கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். மேலும், விரைவில் 18 எம்எல்ஏ., தகுதி நீக்கம் மீதான தீர்ப்பு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.