கூத்துப்பட்டறை முத்துசாமி, சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் பிறந்த இவர், தெருக்கூத்தை தமிழ்க் கலையின் முக்கிய அடையாளம் ஆக்கியவர்.
சினிமா உலகில் நடிகர், நடிகைகள் பலரை உருவாக்கிய கூத்துப்பட்டறையை நிறுவியவர் நா.முத்துசாமி. 2012, ஆம் ஆண்டில், பத்மஸ்ரீ விருது பெற்றவர். விஜய் சேதுபதி, பசுபதி, விமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள்.
தெருக்கூத்து மூலம் பிரபலமான இவர் கூத்துப்பட்டறை மூலம் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வந்தார். மேலும் `வாழ்த்துக்கள்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். கடந்த 1999-ஆம் ஆண்டில் இந்திய அரசின் சங்கீத அகாடமி விருதை பெற்றுள்ளார். முத்துச்சாமி எழுதிய நா.முத்துசாமி கட்டுரைகள் என்ற நூல் 2005-ஆம் ஆண்டில் தமிழக அரசு விருதை வென்றது.
முத்துசாமி மறைவுக்கு திரையுலகத்தினர் மற்றும் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.