நடிகை லேகா வாஷிங்டன் கூறிய, #மீடூ தொடர்பான கருத்துக்கு, நடிகர் சிம்புவின் ரசிகர்கள், அவரை திட்டித் தீர்த்தனர்.
One word : Kettavan. #metoo
— lekha washington (@washingtonlekha) October 21, 2018
அக்.21 அன்று நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வார்த்தை : கெட்டவன் #மீடூ என்று கருத்து போடிருந்தார். அதற்கு சிம்பு ரசிகர்கள் மிக மோசமான மொழியில் கொச்சை வார்த்தைகளால் அந்த டிவிட்டை நிரப்பித் தள்ளியுள்ளனர்.
இதுகுறித்து, லேகா நேற்று தன் டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவில், பெண்கள் ஏன் தைரியமாக வெளியே வர மறுக்கின்றனர் என்பதை, என் முந்தைய, டுவிட்டுக்கு பதிவான கருத்துக்களையே பார்க்கலாம்’ என, தெரிவித்து உள்ளார்.
Please read the comments on my previous tweet to find out why women don’t come out in India.
— lekha washington (@washingtonlekha) October 23, 2018