மீடூ விவகாரம் இப்போது மேலும் சூடுபிடித்துள்ளது. ஆண்கள் குறித்து #மீடூ பேசப்பட்ட நிலையில், மனைவியுடன் சேர்ந்து தன்னை ஆபாசமாக திட்டியதாக சுசி கணேசன் மீது அமலாபால் இப்போது பதிவிட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலையின் #மீடூ புகாருக்கு ஆதரவளிக்கும் வகையில், இயக்குநர் சுசி கணேசன் குறித்து டிவிட்டர் பதிவில் பகிர்ந்தார் நடிகை அமலா பால். அதைப் பார்த்துவிட்டு, தனது மனைவியுடன் சேர்ந்து அமலா பாலை ஆபாசமாக வசைபாடியுள்ளார் சுசிகணேசன். அதைக் கேட்டு அவர் மனைவி மஞ்சரி சிரித்துக் கொண்டிருந்தாராம்!
’திருட்டுப்பயலே’ இயக்குநர் சுசி கணேசன் மீது பெண் இயக்குநர் லீனா மணிமேகலை தெரிவித்த பாலியல் புகாருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்தார். ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் நடிக்கும் போது தானும் சில பாலியல் ரீதியிலான தொல்லைகளை சந்தித்ததாக அமலா பால் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது, சமூக வலைத்தளங்களில் பரபரப்பான நிலையில், இயக்குநர் சுசி கணேசனும் அவரது மனைவியும் தன்னை போனில் அழைத்து ஆபாசமாகப் பேசி அவமானப்படுத்தினர் என்று அமலா பால் ட்விட்டரில் அடுத்த 2 மணி நேர இடைவெளியில் பதிவிட்டுள்ளார்.
என் வாழ்வில் மிகவும் அதிர்ச்சியான தருணம். இயக்குனர் சுசியும் அவரது மனைவி மஞ்சரியும் எனக்கு போன் செய்தார்கள். நான் எடுத்துப் பேசி, என் தரப்பு விளக்கத்தை எடுத்துக் கூற முயன்றேன். அப்போது சுசியின் மனைவியை சமாதானப்படுத்த முயன்ற போது, சுசி கணேசன் என்னை ஆபாசமாகத் திட்டினார். அதைக் கேட்டுக் கொண்டு அவரது மனைவி சிரித்துக் கொண்டிருந்தார். இருவரும் என்னை அவமானப்படுத்த என்னை மிரட்டினர் என்று டிவிட்டரில் கூறியுள்ளார்.
Just got the shock of my life! @DirectorSusi & @sgmanjari called &I picked up to explain the stand.While I was trying to pacify his wife; Susi strted abusing me&to my surprise his wife strted laughing&they both joined to slut shame me. De feel de can scare me with dese tactics ??
— Amala Paul ⭐️ (@Amala_ams) October 24, 2018
சுசி கணேசன் மீது #மீடூ புகார் தெரிவித்த லீனா மணிமேகலைக்கு பதில் கொடுக்கும் விதத்தில் ஒரு ரூபாய் மான நஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார் சுசி. இந்நிலையில் சுசி கணேசனுக்கு எதிராக நடிகை அமலா பால் புகார் கூறியுள்ளார். மனைவியுடன் சேர்ந்து கொண்டு ஒரு நடிகையை இயக்குனர் ஒருவர் இவ்வாறு அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி அச்சுறுத்துவது என்பது, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.